குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து பூஜை துவக்கம்
குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து ஒரு வேளை பூஜை துவக்கப்பட்டது.;
குமாரபாளையம் அப்புராயர் சத்திரம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து ஒரு வேளை பூஜை துவக்கப்பட்டது.
குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து ஒரு வேளை பூஜை துவக்கப்பட்டது.
குமாரபாளையம் நகர் பாலக்கரை பகுதியில் பல நூற்றாண்டு பழமையான அப்புராயர் சத்திரம் என்ற இடம் உள்ளது. இங்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் குதிரைகள் கட்டி, இளைப்பாறி உள்ளார் எனவும், இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில், பல மன்னர்கள் சுவாமியை வணங்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. சில நாட்கள் முன்பு இந்த கோவில் வளாகத்தில் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த கோவிலை பழமை மாறாமல் இந்து சமய அறநிலைத்துறை பராமரிக்க வேண்டும், வழிபாடு செய்யவரும் பக்தர்களுக்கு உதவிடும் வகையில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும், தினமும் மூன்று கால பூஜை செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் சபரிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன் பலனாக தற்போது இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டு, தினமும் ஒரு கால பூஜை நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த கோவிலில் முன்பு இது சம்பந்தமாக போர்டும் வைக்கப்பட்டுள்ளது.