குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் 15 பேர் திமுகவில் இணைவு

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சியினர் நகர செயலர் சரவணன் தலைமையில் 15 பேர் திமுக நகர செயலர் செல்வம் தலைமையில் இணைந்தனர்.;

Update: 2022-05-14 11:00 GMT

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சியினர் நகர செயலர் சரவணன் தலைமையில் 15 பேர் திமுக நகர செயலர் செல்வம் தலைமையில் இணைந்தனர்.

குமாரபாளையத்தில் காங்கிரசார் 15 பேர் தி.மு.க.வில் சேர்ந்தனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். குமாரபாளையம் காங்கிரஸ் கட்சியினர் நகர செயலர் சரவணன் தலைமையில் 15 பேர் தி.மு.கவில் இணையும் விழா தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நகர செயலர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. அனைவருக்கும் செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார். இதனை ஏற்பாடு செய்த 17வது வார்டு செயலர் ராஜ்குமாருக்கு, நகர செயலர் செல்வம் சால்வை அணிவித்து பாராட்டினார். சரவணனின் புதிய அலுவலகத்தில் புதிய தி.மு.க. கிளை கழக அலுவலகத்தை நகர செயலர் செல்வம் திறந்து வைத்தார். இதில் நிர்வாகிகள் ரவி, அன்பழகன், அன்பரசு, விஸ்வநாதன், புவனேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News