தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை; மனநலம் பாதித்த பெண்ணின் அதிர்ச்சி சம்பவம்

பவானியில் மனநலம் பாதித்த பெண் தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-08-24 11:00 GMT

பைல் படம்.

பவானி அருகே ஜம்பை, நல்லிபாளையத்தில் வசித்து வந்தவர் சித்தாயி, 55. இவரது தாய் கருப்பாயி, 76, மகன் செந்தில், 33, மருமகள் தினா, 30, ஆகியோர் உடன் வசித்து வந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட சித்தாயியை அவ்வப்போது மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 16-ம் தேதி வீட்டில் இருந்த சித்தாயி தனக்குத்தானே மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சித்தாயி உயிரிழந்தார். இதுகுறித்து பவானி இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சித்தாயின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News