தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற வீரருக்கு வரவேற்பு
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் குமாரபாளையம் வீரர் மதன் குமார் சாதனை படைத்துள்ளார்.;
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் குமாரபாளையம் வீரர் சாதனை படைத்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் குமாரபாளையத்தை சேர்ந்த பவர் ஜிம் மதிவாணன் மகன் மதன்குமார் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். இவர் இமாச்சல பிரதேசத்திலிருந்து சொந்த ஊரான குமாரபாளையம் வந்த போது, பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் வரவேற்பு வழங்கப்பட்டது. எஸ்.ஐ. தங்க வடிவேல், பஞ்சாலை சண்முகம், விடியல் பிரகாஷ், தீனா, விக்கி, விவேக்,அங்கப்பன், ஐயப்பன், தென்னரசு,, சந்திரன், சீனிவாசன், ஜம்பு, மற்றும் பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.