சட்டம் ஒழுங்கு மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: டி.எஸ்.பி. பேச்சு
சட்டம் ஒழுங்கு மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., தெரிவித்துள்ளார்.;
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அறவே இருக்க கூடாது, போதை பொருட்கள் இல்லாத தமிழகம் என்ற திட்டத்தை அறிவித்து, மாநிலத்தின் அனைத்து பகுதியிலும் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் அமல் படுத்த தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் டி.எஸ்.பி. தலைமையிலான விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியன நடைபெற்றது. குப்பாண்டபாளையம் ஊராட்சியில் ஊராட்சி தலைவி கவிதா தலைமையில் பல இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்களிடம் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
பின்னர் அவர் பேசுகையில், போதை பொருட்கள் பயன்படுத்துவோர், விற்போர் குறித்து தகவல் கிடைத்தால் தெரியப்படுத்துங்கள். தகவல் தருபவர்கள் பெயர்கள் பாதுகாக்கப்படும். சட்டம், ஒழுங்கு மீறுவோர்களுக்கு எதிரான புகார் மனுக்கள் மீது பாரபட்சமின்றி உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்பட பலர் பங்கேற்றனர்.