கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்ததாக விசைத்தறி உரிமையாளர் மீது போலீசில் புகார்.

குமாரபாளையத்தில் கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்ததாக விசைத்தறி உரிமையாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.;

Update: 2025-04-26 10:25 GMT

கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்ததாக விசைத்தறி உரிமையாளர் மீது போலீசில் புகார்.


குமாரபாளையத்தில் கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்ததாக விசைத்தறி உரிமையாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

குமாரபாளையம் காமராஜ் நகர் பகுதியில் வசிப்பவர் முருகன், 49. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர். இவர் கைத்தறியில் உற்பத்தி செய்ய வேண்டிய ஜவுளி ரகங்களை, விசைத்தறியில் உற்பத்தி செய்வதாக, உதவி அமலாக்க அலுவலர் விஜயராணிக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நேரில் ஆய்வு செய்த அதிகாரி விஜயராணி, கைத்தறியில் உற்பத்தி செய்ய வேண்டிய ஜவுளி ரகங்களை, விசைத்தறியில் உற்பத்தி செய்வது உறுதியானது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் விஜயராணி, விதி மீறி ஜவுளி உற்பத்தி செய்த முருகன் மீது புகார் கொடுத்தார். குமாரபாளையம் போலீசார் முருகனை கைது செய்ய நேரில் சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. காணாமல் போன முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News