ஓட்டலில் மது விற்ற தந்தை, மகன் கைது - பள்ளிபாளையத்தில் பரபரப்பு

பள்ளிபாளையம், சங்ககிரி சாலையில் உள்ள உணவகத்தில் மது விற்பனை செய்ததாக, தந்தை,மகன் ஆகியோரை, பள்ளிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.;

Update: 2021-06-23 16:29 GMT

கோப்பு படம்.

நாமக்கல் மாவட்டம்,  பள்ளிபாளையம், சங்ககிரி சாலையில் உள்ள  உணவகத்தில் சட்டவிரோதமாக மது பதுக்கபட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக,பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் கே.சாந்த மூர்த்திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த காவல்துறையினர், தீவிர சோதனை செய்தனர்.

இதில், ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்ததை கண்டறிந்தனர். அங்கிருந்த 52 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். உணவகத்தின் உரிமையாளரான முத்துகுமார், வயது 33 அவருடைய தந்தை செல்வராஜ், வயது 52.ஆகிய இருவரை, பள்ளிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.

உணவகத்தில் மது விற்பனை செய்யப்பட்டு, தந்தை,  மகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது பள்ளிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News