அதிக விலைக்கு மது விற்ற நால்வர், போலி லாட்டரி விற்ற இருவர் கைது
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற நால்வர் மற்றும் போலி லாட்டரி விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.;
அதிக விலைக்கு மது விற்ற
நால்வர், போலி லாட்டரி விற்ற இருவர் கைது
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற
நால்வர் மற்றும் போலி லாட்டரி விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பழைய முருகன் தியேட்டர் அருகில், விட்டலபுரி, பஸ் ஸ்டாண்ட், ஆனங்கூர் பிரிவு ஆகிய பகுதியில் அதிக விலைக்கு அரசு மது பாட்டில்களை விற்ற,
பிரவீன்குமார், 26, தன்ராஜ், 29, செந்தில்குமார், 35, பூமிநாதன், 48, ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து தலா 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் போலி லாட்டரி சீட்டுக்கள் விற்ற வழக்கில், பரமசிவம், 58, ராமலிங்கம், 26, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட தலா 5 சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.