குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கி வைப்பு
குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி கலைமகள் வீதி வார்டு, 30, 22,29, குடியிருப்பு பகுதியில் இன்று இல்லம் தேடி கல்வி துவக்க விழா இனிதே துவக்கப்பட்டது.
துவக்க விழாவிற்கு, நாமக்கல் மாவட்ட இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் சன் பிரிண்டர்ஸ் புவனேஷ்வரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி, தொழில் ஆசிரியர் ஹெலன் பிரிசில்லா மற்றும் எச்.எம்.சி. உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.