குமாரபாளையத்தை சிறந்த நகராட்சியாக மாற்றுவேன்: சேர்மன் உறுதி

குமாரபாளையம் நகரமன்ற முதல் கூட்டத்தில், முதல்வரின் நல்லாசியுடன் சிறந்த நகராட்சியாக மாற்றுவேன் என சேர்மன் தெரிவித்தார்.

Update: 2022-03-30 13:30 GMT

குமாரபாளையம் நகராட்சியில் முதல் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் சார்பில் முதல் நகர்மன்ற கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கும் முன் திருக்குறள் வாசித்து, அதன் பொருளையும் கூறினார். அதன் பின் பேசிய சேர்மன், தமிழக முதல்வர் நல்லாசியுடன் குமாரபாளையம் நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றுவேன், என கூறி கூட்டத்தை துவக்கி வைத்தார்.

கவுன்சிலர்கள் பேசியதாவது:-

பாலசுப்ரமணி (அ.தி.மு.க.): எனக்கு வாய்ப்பளித்த முன்னாள் முதல்வர் எ.பி.எஸ்., ஒ.பி.எஸ். மற்றும் வெற்றி பெற வைத்த என் வார்டு மக்களுக்கும் நன்றி. நகராட்சி நிர்வாகம் மக்கள் பணிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். தற்போதுள்ள நிதி சூழ்நிலையில் ஜீப் வாங்கும் தீர்மானத்தை எடுக்க வேண்டும். நகராட்சி தலைவராக நான்கு முறை தி.மு.க.வினர் தான் இருந்தர்கள். ஏன் குப்பை கொட்ட இடம் வாங்கவில்லை? 30வது வார்டில் பொதுக்கழிப்பிடம் புதிதாக கட்ட வேண்டும். குடிநீர் குழாய் 6 இன்ச் எனும் வகையில் பெரிதாக அமைக்க வேண்டும். 10,11 வார்டுகளுக்கு இடையேயுள்ள சுவற்றை அகற்றி, இணைப்பு சாலையாக மாற்ற வேண்டும். வார்டுகளின் அடிப்படையில் எனது சீட் 30 என்பதால் இருக்கை இறுதியில் வழங்கபட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எனும் வகையில் எனக்கு முன் வரிசையில் சீட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் சம்பளத்தில் பெர்சன்டேஜ் அதிகம் கேட்பதாக தகவல் வந்துள்ளது. இதனை தவிர்த்து, உரிய சம்பளம் அவர்களுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த கூடத்தில் அவர் யார் என்பதை வெளிப்படையக சொல்ல நேரிடும்.

துணை தலைவர் வெங்கடேசன் (தி.மு.க) : தமிழக முதல்வருக்கு பணிவான வணக்கங்கள். என்னை வெற்றி பெற செய்த வார்டு மக்களுக்கு நன்றி. நிதி நிலை மோசமாக இருப்பதால் ஜீப் வாங்கும் தீர்மானத்தை அகற்ற வேண்டி, உறுப்பினர் கூறினார். மிகவும் அத்தியாவசியமான தேவை என்பதால் அதனை ரத்து செய்யவேண்டியதில்லை. குப்பை கொட்ட இடம் தி.மு.க. நகரமன்ற தலைவர்கள் வாங்கி இருக்கலாம் அல்லவா? என்றார். முன்னாள் தி.மு.க.ஜகந்நாதன் நகர மன்ற தலைவராக இருந்த போது தன் சொந்த பணத்தில் நகராட்சிக்கு குப்பை கொட்ட பல்லக்காபாளையம் பகுதியில் இடம் வாங்கப்பட்டது. 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த அ.தி.மு.க. அமைச்சருக்கு குமாரபாளையம் மேல் பாசம் இருந்திருந்தால் குப்பை கொட்ட இடம் தேர்வு செய்து கொடுத்து இருக்கலாமே? குமாரபாளையம் வளர்ச்சியில் அவருக்கு எண்ணம் இல்லை. குப்பை வரி பவானி, திருச்செங்கோடு விட குமாரபாளையத்தில் அதிகம். முன்னாள் அமைச்சர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஒரே சீரான வரியை விதித்து இருக்கலாமே? 25,26,27,28 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்டது நாராயண நகர் சாலை. 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய சாலை அமைக்க 56 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்பகுதியினர் , ஆக்கிரமிப்பை அகற்றி சாலை போடா வேண்டும் என நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்ததால், பணி நிறுத்தப்பட்டது. தற்போது அனைத்து வழகுகளும் தீர்க்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த சாலையயை போர்க்கால அடிப்படையில் புதிய தார் சாலையாக மாற்ற வேண்டும். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தமைக்கு, தமிழக முதல்வருக்கு நன்றி . அ.தி.மு.க. ஆட்சியில் கூட நமது எம்.ஜி.ஆர். நாளிதலுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி விளம்பரம் என்பது நகராட்சியில் இருந்து கொடுக்கப்படுவது அல்ல. பி.ஆர்.ஒ. மூலமாக கொடுக்கப்படுகிறது.

பழனிசாமி (அ.தி.மு.க.): குப்பை வரி விசயத்தில் அரசு உத்திரவை நகராட்சி நிர்வாகம் நீக்க முடியாது. ஆனால் குப்பை வரி அதிகம் என, கவுன்சிலர்கள் கூறுகிறார்கள் என நீங்கள் கடிதம் மூலம் தெரியப்படுத்தலாம் அல்லவா? குப்பை கொட்ட இடம் தேர்வு செய்ய வேண்டும். துப்புரவு பணியாளர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். மக்கள் தொகை அதிகமாகி வருகிறது. குடியிருப்பு பகுதிகளும் அதிகரித்து வருகிறது. 19வது தீர்மானத்தில் ஒப்பந்த புள்ளி சம்பந்தமாக நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என உள்ளது. இது போல் ஒப்பந்த புள்ளி விபரங்கள் மக்கள் தினசரி படிக்கும் நாளிதழ்களில் கொடுத்தால் பொதுமக்கள் பார்வையில் படும்படி இருக்கும். இனி தரும் விளம்பரங்கள் மக்கள் அதிகம் படிக்க கூடிய நாளிதழ்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அழகேசன் (சுயேச்சை): எனது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற காரணமான என் வார்டு மக்களுக்கு நன்றிகள். அவர்கள் கோரிக்கையை நிறைவ்ற்றுவது என் கடமை. என் வார்டில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வடிகால்கள் மிகவும் சேதமாகி உள்ளது. அதனை புதுப்பிக்க வேண்டும். சாக்கடை அடைப்பு குறித்து தகவல் சொன்னதும் ஆட்கள் அனுப்பி தூய்மை படுத்திய சுகாதார அலுவலருக்கு நன்றி. சாக்கடை நடுவே கம்பம் உள்ளது. அதனை அகற்ற வேண்டும்.

ரங்கநாதன் (தி.மு.க.) : குப்பை வரி நீக்க வேண்டும். நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. அதனை கட்டுப்படுத்த வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். நீங்கள் கொசு மருந்து அடிப்பது யாருக்கும் தெரிவதில்லை. குப்பைகள் அகற்ற மிகவும் தாமதம் ஆகிறது.

கதிரவன் (தி.மு.க.): குமாரபாளையம் சிறந்த நகராட்சியாக மாற வேண்டும். பாரபட்சமில்லாமல் பணிகள் செய்து தரவேண்டும். 2001-2006ல் குப்பை கொட்ட நிலம் வாங்கப்பட்டுள்ளது. அதற்கு நகராட்சியில் சான்று உள்ளது. 2006-2011ல் எனது தந்தை சேகர் நகர்மன்ற தலைவராக் இருந்த போது, நகராட்சி குப்பைகள் விவசாய நிலத்தில் அவர்கள் ஒப்புதலுடன் கொட்டப்பட்டது. அதில் மருத்துவ கழிவுகள் இருந்ததால் விவசாயி ஒருவரது காலில் ஊசி ஏறியது. இதனால் அங்கு குப்பை கொட்ட தடை விதித்தனர். முன்பு நடந்தது எப்படி இருந்தாலும், இப்போது நடக்க வேண்டியதை செய்வோம். கட்சி பேதமின்றி வரும் தலைமுறைக்கு வழி வகுத்து தருவோம்.குப்பை, வடிகால், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள கவுன்சிலர்கள் குழுக்கள் அமைத்து கண்காணிக்க செய்வோம். நாய்கள், பன்றிகள்,கொசு தொல்லை அகற்ற வேண்டும். பல ஊர்களில் வடிகால் நான்கு அடி ஆழம், ஆறு அடி அகலம் உள்ளது. ஆனங்கூர் சாலையில் ஆயிரக்ககணக்கான வீடுகள் உள்ள இடத்தில் ஒன்றரை அடி ஆழம் கூட வடிகாலில் இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. என்னால் ஆனா அனைத்து ஒத்துழைப்பும் தருகிறேன். ஜீப் வாங்கும் திட்டம் சற்று தள்ளி வைக்கலாம். அப்பா வாங்கிய நற்பெயர் நான் காப்பாற்ற வேண்டும். எனது வார்டு பணிகள் செய்து தர வேண்டும். எல்லோரும் சேர்ந்து குப்பை கொட்ட இடம் வாங்கலாம்.

கனகலட்சுமி : (சுயேச்சை): காவிரி ஆற்றுப்பகுதியில் தூய்மை பணி செய்ய வேண்டும். கழிப்பிடங்கள் மிகவும் சேதமாகியுள்ளன. வடிகால்கள் சீரமைக்க வேண்டும். கோணமனை சந்து பகுதியில் மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டும். அண்ணா நகரில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். குப்பைகள் தினமும் எடுக்கக் வேண்டும்.

சத்தியசீலன் (தி.மு.க.): விளம்பர போர்டுகள் அதிகம் உள்ளது. அவைகளை அகற்ற வேண்டும். குப்பை வரி அதிகம் உள்ளதாக தீர்மானம் போட்டு அனுப்பலாம்.

ஜேம்ஸ் (தி.மு.க.): தினமும் குப்பை எடுப்பதில்லை. வடிகாலில் மண் சேருகிறது. கழிவுநீர் தேங்க விடக்கூடாது. சாலை வசதி செய்து கொடுத்த சேர்மனுக்கு நன்றி. சத்யா புரி, உள்ளிட்ட பல வீதிலில் சாக்கடை வசதி இல்லை. 6வது வீதியில் டேங்க் அமைக்க வேண்டும். அரசு மேனிலைப்பளிகள் உள்ளதால் சாலைகளை சீரமைத்து தர வேண்டும். 6 வீதிகளில் மின்விலகுகள் கிடையாது.

வேல்முருகன் (சுயேச்சை) : கிழக்கு காவேரி நகரில் போர்வெல் பைப் அமைக்க வேண்டும். ராஜராஜன் நகரில் சாக்கடை வசதி அமைக்க வேண்டும். ஆணையாளர் வெளியூர் சென்றுவிட்டால் பொறியாளர் நகரில் சென்று பார்வையிட ஜீப் இல்லை. ஆகவே ஜீப் வாங்க வேண்டும்.

ரமேஷ்குமார் (தி.மு.க.) : எனது வார்டில் வடிகால், கழிப்பிட வசதி, தார் சாலை வசதி செய்து தர வேண்டும். போர்வெல் வசதி செய்து தர வேண்டும். தினமும் குப்பை அகற்ற வேண்டும்.

அம்பிகா (தி.மு.க.): அம்மன் நகர் 2ம் நெம்பர் ரேசன் கடை புறவழிச்சாலையில் உள்ளதால், பொதுமக்கள் வெகுதூரம் சென்று பொருட்கள் வாங்க சிரமப்படுகிறார்கள். அதனை ஊருக்கும் மாற்ற வேண்டும். நாராயண நகரில் வீடுகளின் வாசலில் தார் ரோடு மிக உயரமாக உள்ளதால், மழை களங்களில் தண்ணீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. அதனை சமன் செய்திட வேண்டும்.

பரிமளம் (தி.மு.க.): வடிகால், கழிப்பிடம் கட்ட வேண்டும். பைப் லைன் வேலை செய்த பள்ளம் மூடாமல் இருப்பதால் இடையூறு ஏற்படுகிறது.

கிருஷ்ணவேணி (தி.மு.க.): எனது வார்டு குறைகளை லெட்டரில் எழுதி கொண்டு வந்துள்ளேன். அதனை சரி செய்து கொடுக்க வேண்டும்.

விஜயா (சுயேச்சை) : எனது வார்டில் குப்பைகள் அகற்றுவது இல்லை. தினமும் அகற்ற வேண்டும். சாக்கடை அமைக்க வேண்டும். டேங்க் மூடாமல் உள்ளதால் நீர் அசுத்தமாகிறது. கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.

கோவிந்தராஜ் (தி.மு.க): சாக்கடை சுத்தம் செய்திட வேண்டும். கொசு தொல்லை அதிகம் உள்ளது. 5 போர்வெல்கள் பழுதாகிவிட்டது. சரி செய்து தர வேண்டும். கழிப்பிட வசதி வேண்டும்.

பூங்கொடி(அ.தி.மு.க.): பள்ளி அருகே உலா வாட்டர் டேங்க் சுத்தம் செய்ய வேண்டும்.

சுமதி (சுயேச்சை): குப்பை தினமும் அகற்ற வேண்டும். பெராந்தர்காடு பகுதியில் வடிகால் சீரமைக்க வேண்டும். கழிப்பிடம் சீரமைக்க வேண்டும்.

ராஜூ (தி.மு.க.): சின்னப்பநாயக்கன்பாளையம் பள்ளியில் 800 மாணவர்கள் படித்து வருகிறார்கள். பள்ளி எதிரே உள்ள திடக்கழிவு மேலாண்மை பணிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இதன் துர்நாற்றத்தால் பெறும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். வேகத்தடை, வடிகால் அமைக்க வேண்டும்.

தீபா (சுயேச்சை): பஸ் ஸ்டாண்டிற்கு எல்லா பஸ்களும் வருவதில்லை. ராஜாஜி குப்பம் பகுதியில் 300 குடும்பங்களுக்கு ஓரே கழிப்பிடம் உள்ளது. அதுவும் பழுதாகி உள்ளது. அதனை சீர்படுத்தி தர வேண்டும்.

தர்மராஜ்(தி.மு.க): நகரில் கருப்பு டேங்க் அனைத்து இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அது துர்நாற்றம் வீசுவதால் அதனை அகற்ற வேண்டும். குப்பை வண்டிகளை சீரமைக்க வேண்டும்.

சுகாதார அலுவலர் ராமமூர்த்தி : குப்பை வரி அனைத்து மாநிலங்களில் உள்ளது. குப்பைகள் பிரித்து வாங்கி வருகிறோம். நாள் ஒன்றுக்கு 16 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது. குப்பைகள் சாலையில் கொட்டுவோர் மீது அபராதம் விதிக்கப்படும். நீங்களும் விழிப்புணர்வு கொடுங்கள். குப்பை வண்டி 36 உள்ளது. அதனை பராமரிப்பு செய்யப்படும்.

கமிஷனர் சசிகலா : குப்பை வரியை நாம் நீக்க அதிகாரம் கிடையாது. நகரில் உள்ள விளம்பர போர்டுகள் நேற்று கூட 30 போர்டுகள் அகற்றப்பட்டன. சொத்துவரி, உள்ளிட்ட வரியினங்கள் 4 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது. தற்போது 76 சதவீதம் மட்டுமே வசூல் ஆகியுள்ளது. 24 சதவீதம் நிலுவை உள்ளது. இதனை வசூல் செய்தாலே நகருக்கு தேவையான பணிகள் செய்யலாம். நீங்களும் உங்கள் பகுதி வியாபாரிகள், பொதுமக்களிடம் சொல்லி செலுத்த சொல்லுங்கள்.

விஜய்கண்ணன் (தலைவர்) : அனைத்து கவுன்சிலர்கள் கோரிக்கை கேட்டேன். விரைவில் எவ்வித பாரபட்சம் இல்லாமல் பணிகள் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு நகரமன்ற கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

Tags:    

Similar News