மனைவியுடன் சண்டையால் கணவன் தற்கொலை!

குமாரபாளையத்தில் மனைவியுடன் கோபம் கொண்ட கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-12-05 10:30 GMT

மனைவியுடன் கோபம் கொண்ட கணவன் தற்கொலை - குமாரபாளையத்தில் மனைவியுடன் கோபம் கொண்ட கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் எதிரில் வசிப்பவர்கள் செந்தில், 24, சவுந்தர்யா, 23, தம்பதியர். தள்ளுவண்டி கடை வைத்து தட்டுவடை செட் வியாபாரம் செய்து வருகிறார்கள். வேலைக்கு சில ஆட்களை வைத்து தொழில் செய்து வந்த நிலையில், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், சுவை இல்லை என்று கூறியதால், ஆட்களை நிறுத்தி விட்டு நாமே செய்யலாம் என்று கூற, இதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சவுந்தர்யா தன ஒரு வயது பெண் குழந்தையுடன் தன பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் பலமுறை அழைத்தும் வராததால், மனமுடைந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 10:00 மணியளவில், தன் வீட்டில் நைலான் கையிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் சவுந்தர்யா புகார் செய்ய, போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News