பாலியல் தொழிலில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது
குமாரபாளையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட வழக்கில் கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.;
குமாரபாளையத்தில் பாலியல் தொழில் வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் அருகே நெட்டவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன், 48. விசைத்தறி கூலி. இவர் நேற்று மதியம் 12:00 மணியளவில், சரவணா தியேட்டர் அருகே வந்து கொண்டிருக்கும் போது, குமாரபாளையம் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஸ்ரீதர், 36, என்பவர், நானும், என் மனைவி சுமதி, 35, சேர்ந்து அழகிய பெண்கள் வைத்து பாலியல் தொழில் செய்து வருகிறோம். அழகிய இளம் பெண்கள் உள்ளனர். 2 ஆயிரத்து 500 கொடுத்தால், உல்லாசம் அனுபவிக்கலாம், என்று கூறியுள்ளார். அவர்களை போலீசில் பிடித்துக் கொடுக்க எண்ணிய சித்தேஸ்வரன், வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அவரை நடராஜா நகரில் உள்ள, ஒரு வீட்டிற்கு அந்நபர் அழைத்து போய் உள்ளார். அங்கு சுமதி உள்பட நான்கு பெண்கள் இருந்துள்ளனர். இளம் வயது பெண்ணை காட்டி, வாடிக்கையாளர் வந்துள்ளார், நன்றாக கவனித்து கொள் என்று ஒரு பெண்ணை, சித்தேஸ்வரனிடம் அனுப்பி வைக்க, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, போய் பணம் எடுத்து வருகிறேன், என கூறிவிட்டு, அங்கிருந்து நழுவிய சித்தேஸ்வரன் குமாரபாளையம் போலீசில் இது குறித்து புகார் கொடுத்து உள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று ஸ்ரீதர், சுமதி, இருவரை கைது செய்தனர். மேலும் பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்த புவனேஸ்வரி, 32, பத்மா, 33, திவ்யா, 22, ஆகிய மூவரையும் அழைத்து வந்து காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். வீட்டின் உரிமையாளர் நாகராஜ், தலைமறைவானார்.