சூறைக்காற்றில் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்..!

குமாரபாளையம் அருகே சூறைக்காற்று பலமாக வீசியதில் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முற்றிலும் சேதமானது.;

Update: 2024-10-24 04:14 GMT

குமாரபாளையம் அருகே சூறைக்காற்று பலமாக வீசியதில் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முற்றிலும் சேதமானது.

சூறைக்காற்றில் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

குமாரபாளையம் அருகே சூறைக்காற்று பலமாக வீசியதில் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முற்றிலும் சேதமானதால் .தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு. செய்தனர்.

குமாரபாளையம் அடுத்த சமய சங்கிலி, கரைமேடு, சந்தைமேடு, செங்குட்டை பாளையம், மேற்கு தொட்டிபாளையம், பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேலான பரப்பளவில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன... நேற்று வீசிய பலத்த சூறை காற்றில் 40 ஏக்கருக்கும் மேலான வாழை மரங்கள் அடியுடன் சாய்ந்து சேதமாயின. அறுவடைக்கு தயாராக இரண்டு மாதங்களே உள்ள நிலையில் வாழை மரங்கள் காற்றில் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்,

கரும்பு பயிரிடுவதால் விவசாய ஆள் கூலிகள் அதிகரிப்பதால் இந்த முறை சமயசங்கிலி பகுதியில் பலரும் வாழையை தான் நம்பி பயிரிட்டு இறந்தனர். இதுவரை இல்லாத அளவில் நேற்று வீசிய பலத்த சூறைக்காற்றில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால், தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளை வருவாய்த் துறையினர் மூலம் கணக்கெடுத்து, வாழை பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை தர ஆவண செய்ய வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்...

இதனை அடுத்து இன்று சமய சங்கிலி பகுதியில் வாழை சேதங்கள் குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சுகன்யா மற்றும் சமயசங்கிலி கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் ஆகியோர் பயிர் சேதங்கள் குறித்த கணக்குகள் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர் அதில் 40 ஏக்கர் வரையிலான வாழை மரங்கள் முழுவதுமாக சேதம் ஆகி இருப்பதாகவும் ஏக்கருக்கு ஆயிரம் மரங்கள் வீதம் 40 ஆயிரம் மரங்கள் வரை முழுவதுமாக சேதம் அடைந்திருப்பதாகவும் அதன் தற்போதைய மதிப்பு மரத்திற்கு 100 முதல் 150 வீதம் ஐந்திலிருந்து எட்டு லட்சம் வரை இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News