எப்படி இறந்தான் என் மகன்? உயிரிழந்த இளைஞரின் தந்தை போலீசில் புகார்

குமாரபாளையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார்.;

Update: 2022-04-05 15:00 GMT

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் கவுதம், 29. தண்ணீர் கேன் விநியோகம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர். திருமணம் ஆகாதவர். இவர் நேற்றுமுன்தினம் மாலை 02:00 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். மாலை 06:00 மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை.

இவரது பெற்றோர், நண்பர்கள் முயற்சி செய்தும் பலனில்லை. இவரை இரவு 08:00 மணியளவில் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து பார்த்தபோது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளார். நேற்று இவரது பிரேத பரிசோதனை நடைபெற்றது.

இந்நிலையில் உயிரிழந்த கவுதமின் தந்தையான கந்தவேல் (55) , எப்படி இறந்தான் என் மகன்? என மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், பிரேத பரிசோதனை முடிந்தது. ஆயினும் ஆய்வக பரிசோதனை அறிக்கை வந்தவுடன் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News