குமாரபாளையத்தில் அனைவருக்கும் வீடு திட்ட சிறப்பு முகாம்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அனைவருக்கும் வீடு திட்ட சிறப்பு முகாமினை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.

Update: 2022-03-12 12:15 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அனைவருக்கும் வீடு எனும் திட்ட சிறப்பு முகாமினை பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அனைவருக்கும் வீடு திட்ட சிறப்பு முகாமினை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு என்ற திட்ட சிறப்பு முகாம் நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமையில் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு இந்த திட்டம் குறித்த விளக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி முகாமினை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.

இதுகுறித்து வாரிய ஏ.ஈ. கைலாசம் கூறுகையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது என அறிந்து, மக்கள் பயனடையும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதில் 4 கட்டங்களாக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. பயனாளிகள் பெயரில் பட்டா அல்லது பத்திரம் வைத்திருக்க வேண்டும். மாத வருமானம் 25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். பயனாளிகள் பெயரிலோ, பயனாளியின் குடும்பத்தினர் பெயரிலோ இந்தியாவில் எந்த பகுதியிலும் வேறு குடியிருப்பு இருக்க கூடாது. பயனாளிகள் குமாரபாளைய பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். கட்டடத்தின் அடித்தளம் நிறைவு பெற்ற பின், கட்டிட லிண்டல் முடிந்த பின், கான்கிரீட் தளம் முடிந்த பின், தரை, பூச்சு, வர்ண வேலைகள் முடிந்த பின், ஆகிய 4 கட்டங்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், அரசின் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது அதிகாரிகள் கையில் உள்ளது. காலை முதல் நடந்த இந்த முகாமில் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட குமாரபாளையம் நகராட்சி பகுதியில் மாலை 04:00 வரை ஒற்றை இலக்க நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பொதுமக்கள் அதிகம் கலந்து கொள்ளும் வகையில் ஆட்டோ விளம்பரம் செய்தால்தான் நகரின் உட்பகுதியில் உள்ளவர்களும் இது போன்ற முகாம் நடக்கிறது என அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்தனர்.

இதில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், வாரிய தொழில் நுட்ப உதவியாளர்கள் கணேசன், ராஜா பங்கேற்றனர்.

Tags:    

Similar News