குமாரபாளையத்தில் நெல் நாற்றுகளை சேதப்படுத்திய குதிரைகள்: விவசாயிகள் சோகம்

குமாரபாளையத்தில் நாற்றுகளை சேதப்படுத்தும் குதிரைகளால் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-08 15:00 GMT

குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் நாற்றுக்களை சேதப்படுத்திய குதிரைகள்.

மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் அனைத்து பகுதியிலும் நெல் நடவு பணிகள் துவங்கியுள்ளன. பல இடங்களில் விவசாயிகள் நாற்றுக்கள் விட்டுள்ளனர்.

குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெற்பயிர் பயிரிட நாற்றுக்கள் விட்டுள்ளனர். குறிப்பிட்ட கால வளர்ச்சிக்கு பின்னர் இந்த நாற்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்யப்படும்.

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த குதிரைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் நாற்றுகளை உண்டு சேதப்படுத்தியுள்ளன. வாய்க்காலில் 137 நாட்கள் மட்டுமே தண்ணீர் வரும் என்ற நிலையில், இனி நாற்று விட்டு அது வளர்ந்து நடவு செய்து பயிர் வளரும் வரையில் வாய்காலில் தண்ணீர் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

குதிரைகள் நாற்றுக்களை சேதப்படுத்தியதால் தற்போது நெற்பயிர் நடவு செய்யும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News