விவசாய நிலங்களில் பயிர்களை சேதமாக்கும் குதிரைகள்!
குமாரபாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் குதிரைகள் பயிர்களை சேதமாக்கி வருகின்றன.
விவசாய நிலங்களில் பயிர்களை சேதமாக்கும் குதிரைகள்
குமாரபாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் குதிரைகள் பயிர்களை சேதமாக்கி வருகின்றன.
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி பகுதிகளில் கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் குதிரைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன் கூறியதாவது:
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆலங்காட்டுவலசு தேவராஜ் என்ற விவசாயி தோட்ட கரும்பு பயிர்களை இரவில் வந்து மேய்ந்து விட்டு சென்று விட்டது. நேற்று கோட்டைமேடு பகுதிகளில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் நெல் நாற்றங்கால்களில் நெல் நாற்றுப் பயிரை மேய்ந்து விட்டு சென்று விட்டது. மீண்டும் அவர்கள் நாற்று விட்டு பயிர் செய்தால் இன்னும் ஒரு மாத காலம் கடந்து தான் பயிர் நடவை செய்ய வேண்டி உள்ளது. அதற்குள் மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்படும் அதனால் விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது ஆகவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நாமக்கல் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு அலுவலர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு தொல்லை தரும் குதிரைகளை பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.