குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி கற்பித்தல் பொருட்கள் கண்காட்சி

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம், கற்பித்தல் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.;

Update: 2022-02-24 12:15 GMT

குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கற்பித்தல் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாநில திட்ட இயக்குனர் சுதன், நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழிகாட்டுதலில் இல்லம் தேடி கல்வி இயக்கம் சார்பில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவியர்களுக்கு கற்பித்தலுக்காக தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி பள்ளி தலைமை ஆசிரியை (பொ) சாரதா தலைமையில் நடைபெற்றது. தன்னார்வலர் முகாமை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) ஜோதியும், கண்காட்சியை மேலாண்மை குழுத் தலைவர் மணிமேகலையும் துவக்கி வைத்தனர்.

மாணவ, மாணவியர்களுக்கு பயன்படும் வகையில் 100க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பள்ளி மாணவியர் கண்டு பயன்பெற்றனர். தன்னார்வலர் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்கள் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் நடத்திடும் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் விடியல் பிரகாஷ், டாக்டர் சண்முகசுந்தரம், ஆசிரியர் பயிற்றுனர் கணேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News