விடுமுறை நாட்களில் வரி வசூல்: குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் தகவல்
குமாரபாளையத்தில் விடுமுறை நாட்களில் வரி வசூல் செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.;
குமாரபாளையத்தில் விடுமுறை நாட்களில் வரி வசூல் செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் நகராட்சியில் வரி செலுத்தாத நபர்கள் உடனே வரி செலுத்த வேண்டி மைக் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா கூறியதாவது:- 100 சதவீத வரி வசூல் இலக்கை மார்ச் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிறு நாட்களில் கூட நகராட்சி வரி வசூல் மையத்தில் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் வரி செலுத்தாத நபர்கள் இடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.