குமாரபாளையம் அருகே செடிகள், கொடிகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர்
குமாரபாளையம் அருகே செடிகள், கொடிகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையோரங்களில், டிவைடர் பகுதிகளில் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்துள்ளன.
புதர் போல் கிடப்பதால் டூவீலர் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விஷ ஜந்துக்களும் இங்கு தங்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் எளிதில் செல்லும் வகையில் புதர்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.