நகராட்சி சேர்மனின் சொந்த செலவில் உயர் கோபுர மின் விளக்கு பழுது நீககம்
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு சேர்மனின் சொந்த செலவில் பழுது சரி செய்யப்பட்டது.;
குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் உள்ள உயர்கோபுர மின்விளக்கு சேர்மன் சொந்த செலவில் பழுது சரி செய்யப்பட்டது.
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உயர் கோபுர மின்விளக்கு பழுதாகி நீண்ட நாட்களாக எரியாமல் இருந்தது. இது பற்றி தகவலறிந்த நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தனது சொந்த செலவில் பழுது சரி செய்தார்.
தலைமை டாக்டர் பாரதி, கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், கிருஷ்ணவேணி, கனகலட்சுமி, விஜயா, சியாமளா, பூங்கொடி, வள்ளியம்மாள், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.