ஹவாலா பணம் என்று கூறிய மோசடி வழக்கில் மூவர் கைது

குமாரபாளையத்தில் ஹவாலா பணம் என்று கூறிய மோசடி வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-05-21 10:34 GMT

ஹவாலா பணம் என்று கூறிய மோசடி

வழக்கில் மூவர் கைது

குமாரபாளையத்தில் ஹவாலா பணம் என்று கூறிய மோசடி வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

ஓமலூர் வட்டம், சுருக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு, 45. கட்டிட கூலி. இவர் மார்ச், 24, காலை வேலைக்கு சென்றவர், மார்ச், 26, இரவு வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மார்ச், 26, இரவு 09:30 மணியளவில், தங்கராசு மகளின் மொபைல் போனுக்கு, போன் செய்து தங்கராசு பேசியுள்ளார். மார்ச், 24, மதியம் 12:30 மணியளவில், குமாரபாளையம் அருகே எக்ஸல் கல்லூரி அருகில், அம்பூரை சேர்ந்த சந்தோஷ்குமார், 31, கோகுல், 30, அல்லிமுத்து, 35, ஆகியோர், ஹவாலா பணம் 10 ஆயிரம் ரூபாய்க்கு, 30 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி, கடத்தி வந்து, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் விடுவோம் என்று கூறி மிரட்டி, தன்னையும், பெருமாள் என்பவரையும், நரசிம்மன் என்பவர் உதவியுடன், அடைத்து வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். இது குறித்து தங்கராசு மனைவி பச்சியம்மாள், 35, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், சந்தோஷ்குமார், 31, கோகுல், 30, அல்லிமுத்து, 35, நரசிம்மன், 36, ஆகிய நால்வரை கைது செய்தனர்.

Similar News