காவலர் தின வீர வணக்க நாள் அனுசரிப்பு!

குமாரபாளையத்தில் காவலர் தின வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2023-10-21 14:45 GMT

படவிளக்கம் : குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் காவலர் தினம் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் காவலர் தின வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது.

குமாரபாளையம் காவலர் தின வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி விடியல் ஆரம்பம் சார்பில் நடந்தது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவியர், காவலர்கள் பங்கேற்று பணியின் பொது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. எஸ்.ஐ. தங்கவடிவேல் கூறியதாவது:

அக். 21ல் காவலர் வீர வணக்க நாளாக நாடு முழுதும் கடைப்பிடிக்கபடுகிறது. 1959ல் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கும், அதே போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது உயிர்நீத்த 188 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளி, அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியிலும் காவலர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.பேச்சு போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தங்கள் படைப்புகளை பேசிக்காட்டினர். ஓவிய போட்டியில் பங்கேற்றவர்கள் தங்கள் படைப்புகளை காவலர் தின அனுஸ்டிப்பு மேடையில் வைத்து, பணியின் பொது உயிர்நீத்த காவலர்களுக்கு மாணவ, மாணவியர் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

விடியல் பிரகாஷ், எஸ்.ஐ.க்கள் சந்தியா, முருகேசன், மாதேஸ்வரன், டேவிட் ஏட்டுகள் ராம்குமார், பிரபாகரன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News