குமாரபாளையம் முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்து பெற்ற நகர்மன்ற தலைவர், துணை தலைவர்

குமாரபாளையம் நகரமன்ற தலைவர், துணை தலைவர் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்து பெற்றனர்.;

Update: 2022-03-05 15:15 GMT
குமாரபாளையம் முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்து பெற்ற நகர்மன்ற தலைவர், துணை தலைவர்

குமாரபாளையம் நகரமன்ற தலைவர் விஜய்கண்ணன், துணை தலைவர் வெங்கடேசன், ஆதரவு கவுன்சிலர்கள், தி.மு.க. மாவட்ட செயலர் மூர்த்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

  • whatsapp icon

குமாரபாளையம் நகரமன்ற தலைவர், துணை தலைவர் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

குமாரபாளையம் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய்கண்ணன், நகர மன்ற தலைவர் தேர்தலில் 18 ஓட்டுக்கள் பெற்று நகரமன்ற தலைவராகவும், துணை தலைவராக முன்னாள் தி.மு.க. நகர செயலர் வெங்கடேசனும் வெற்றி பெற்றனர்.

நகரமன்ற தலைவர் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்கள் தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம், ஜே.கே.கே. நடராஜ கல்வி நிறுவன தலைவர் செந்தாமரை உள்ளிட்ட நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தி.மு.க. மாவட்ட செயலர் மூர்த்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களுக்கு நன்றி கூறினர்.

Tags:    

Similar News