குமாரபாளையத்தில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் மூதாட்டி ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.;
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் பழனியம்மாள், 78. விசைத்தறி கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கெனவே சாலை விபத்தில் சிக்கி, முதுகெலும்பு பகுதி வலி இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அருகில் வசிக்கும் இவரது மகன் தாமோதரன் தன் தாயின் முனகல் சத்தம் கேட்டு அருகில் சென்ற பார்த்த போது, தீக்காயங்களுடன் இருந்துள்ளார். இதனை விசாரித்தபோது, அவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., மலர்விழி வழக்குப்பதிவு செய்து வவிசரணை செய்து வருகிறார்.