எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
மாணவர்கள் எப்போதும் தங்களுடைய லட்சியங்களை நோக்கி நடை போட வேண்டும் என மலேசிய தூதரக அதிகாரி சரவணகுமார் பேச்சு;
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியின் 14 ஆவது பட்டமளிப்பு விழா தாளாளர் மதிவாணன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மலேசிய இந்திய தூதரக அதிகாரி சரவணகுமார் பங்கேற்று, முதுநிலை ஆடை வடிவமைப்புத் துறையில் பெரியார் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற ரித்தாணி உள்ளிட்ட 433 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மலேசியா தூதரக அதிகாரி சரவணகுமார் பட்டங்கள் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், மாணவர்கள் எப்போதும் தங்களுடைய லட்சியங்களை நோக்கி நடை போட வேண்டும். கல்லூரி படிக்கும் காலத்திலேயே உங்களின் எதிர்காலத்திற்கான விதை தூவப்படுகிறது. உங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றும் வண்ணம் உங்கள் முயற்சிகள் இருக்க வேண்டும். படித்து பட்டம் பெற்றிருக்கும் நீங்கள் எதிர்காலத்தில் உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் உங்களின் கல்வியினை மிகச் சிறந்த முறையில் வழங்கிய இந்த கல்லூரிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
ஆசிய இலங்கை இந்திய வணிக சம்மேளனத் தலைவர் ஜம்புநாதன் இளங்கோ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்தி பேசினார். கல்லூரியின் முதல்வர் காமராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.
பட்டங்கள் பெற்ற மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் பெற்றோர்கள் இல்லாத பல்வேறு கல்லோரிகளை சேர்ந்த 72 மாணவ, மாணவியர்களுக்கு தாளாளர் மதிவாணன் கல்வி உதவித்தொகை வழங்கினார்.