அதிக விலைக்கு மது விற்ற நபர்கள் இருவர் கைது

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-04-21 11:42 GMT

அதிக விலைக்கு மது விற்ற

நபர்கள் இருவர் கைது

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் அரசு மது அதிக விலைக்கு விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சரவணா தியேட்டர், ஆனங்கூர் பிரிவு பகுதியில் அதிக விலைக்கு மது விற்பதாக அறிந்து, நேரில் சென்றனர். அங்கு அதிக விலைக்கு அரசு மது விற்றுக்கொண்டிருந்த பஷரப்புல்லா, 23, வேணுகோபால், 54, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News