அரசு இடம் ஆக்கிரமிப்பு முயற்சி: மீண்டும் பணிகளை நிறுத்திய வருவாய்த்துறை

குமாரபாளையத்தில் அரசு இடம் ஆக்கிரமிப்பு முயற்சி நடந்து வருகிறது.;

Update: 2022-09-01 14:00 GMT

ஆக்கிரமிப்புக்குள்ளான இடம்.

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில் பின்புறம் அரசு புறம்போக்கு இடம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் இங்கிருந்த பெரிய மரம் ஒன்றை மர்ம நபர்கள் சிலர் அனுமதி இல்லாமல் வெட்டினர்.

இதுகுறித்து வருவாய்த்துறையிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது நடவடிக்கை இல்லாததால் அதே இடத்தில் சுற்றுச்சுவர் கட்டினர். அப்போதும் வருவாய்த்துறையிடம் புகார் தெரிவித்து தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டது. ஆனால் மரம் வெட்டியதற்கும், அரசு இடம் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தில் சுற்றுச்சுவர் கட்டியதற்கும் அபராதம் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் நேற்று மீண்டும் அதே இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றது. சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்பதை அறிந்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஊராட்சி தலைவி புஷ்பா கூறுகையில், அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபடுவோர் நடவடிக்கை எடுக்க தாசில்தார் வசம் புகார் தெரிவித்து அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் கூறுகையில், அரசு இடத்தில் ரேசன் கடை, மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்கள்.

Tags:    

Similar News