தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்று சாதித்த அரசு பள்ளி ஆசிரியர்
தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி ஆசிரியர் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.;
தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்று திரும்பிய ஆசிரியர் கவிராஜ், மாணவர்களிடம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு ஊக்கப்படுத்தினார்.
அகில இந்திய குடிமைப்பணி கால்பந்து போட்டி மார்ச் 9 முதல் 17 வரை டெல்லியில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 32 அணிகள் பங்கேற்றனர். தமிழக அணி சார்பாக 20 கால்பந்து வீரர்கள் பங்கேற்றனர்.
இவர்களில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆங்கில ஆசிரியர் கவிராஜ் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற 32 அணியில் தமிழக அணியினர் ஆறாவது இடம் பெற்று சாதனை படைத்தனர். இந்த நிகழ்வை கவிராஜ் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு ஊக்கப்படுத்தினார்.
தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று வந்த ஆசிரியர் கவிராஜ்-க்கு தலைமை ஆசிரியர் ஆடலரசு, என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி உள்பட பலர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.