பிளஸ் 2 பொது தேர்வில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை
பிளஸ் 2 பொது தேர்வில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை படைத்துள்ளனர்.;
பிளஸ் 2 பொது தேர்வில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை
பிளஸ் 2 பொது தேர்வில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமாரபாளையம்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 193 பேர் தேர்வு எழுதியதில் 189 பேர் தேர்ச்சி பெற்று, 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். இதில் பிரியதர்சினி 574, ரேவதி, 567, சௌடேஸ்வரி 561 மதிப்பெண்கள் பெற்று முதலாம், இரண்டாம், மூன்றாமிடம் பிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் நிவேதனா என்ற மாணவி, 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிகளை தலைமை ஆசிரியை காந்தரூபி உள்ளிட்ட ஆசிரியைகள், ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 206 பேர் தேர்வு எழுதியதில் 185 பேர் தேர்ச்சி பெற்று, 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். இதில் செல்வகுமரன் 576, தனுஷன் 530, அருள்பிரகாசம் 522, மதிப்பெண்கள் பெற்று முதலாம், இரண்டாம், மூன்றாமிடம் பிடித்துள்ளனர். டெக்ஸ்டைல் பாடப்பிரிவில் அபிஷேக், கோகுலகிருஷ்ணன், பெரியசாமி, உதயகுமார், ஆகிய நான்கு மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை தலைமை ஆசிரியர் ஆடலரசு மற்றும் ஆசிரிய பெருமக்கள் பாராட்டினார்கள்.