அரசு பள்ளியின் வசதிகள் குறித்து பேனர்

குமாரபாளையம் அருகே அரசு பள்ளி சார்பில் அதன் வசதிகள் குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-05-09 15:00 GMT

அரசு பள்ளியின் வசதிகள்

குறித்து பேனர்

குமாரபாளையம் அருகே அரசு பள்ளி சார்பில் அதன் வசதிகள் குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வியில் பயில வைக்க, தனியார் பள்ளிகளை தான் நாடுவது வழக்கம். ஆனால், வசதி இல்லாத பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது வழக்கம். ஆனால், மாணவர்கள் பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் போது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்றவர்கள் ஒன்றாக கல்லூரியில் சேரும் நிலை உருவாகி வருகிறது. அப்போது, தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள், கணினி பயன்பாடு, ஆங்கில மொழி ஆளுமை, உள்ளிட்டவைகளில் முதன்மையாக உள்ளனர். இதனால் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள், தடுமாறும் நிலை இருந்து வந்தது. இதனை தடுக்க, சீருடை மாற்றம், பள்ளி பேக், செப்பல், மடி கணினி, இலவச புத்தகங்கள், ஸ்மார்ட் ரூம், மதிய உணவு, காலை உணவு, ஆங்கில வழி கல்வி என பல தரப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இதனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களால் போட்டி போட முடிந்தது. இதனை புதியதாக பள்ளியில் சேரும் மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்திடும் வகையில், குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க, பள்ளியின் வசதிகள், இதர சிறப்பம்சங்கள் குறித்து பேனர் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

படவிளக்கம் : 

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க, பள்ளியின் வசதிகள், இதர சிறப்பம்சங்கள் குறித்து பேனர் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

Similar News