அரசு பள்ளி பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு
குமாரபாளையம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளில் பூட்டை உடைத்தும் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்தும் லேப்டாப் திருட்டு குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.;
அரசு பள்ளி பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு
குமாரபாளையம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளில் பூட்டை உடைத்தும் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்தும் லேப்டாப் திருட்டு குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வேமன்காட்டுவலசு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி கடந்த சனிக்கிழமை அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு நடத்தி விட்டு, மாலை பள்ளியின் ஆசிரியர் அருள்செல்வி, பள்ளியில் உள்ள அனைத்து அறைகளையும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை மீண்டும் பள்ளியை திறக்க வந்த பொழுது பள்ளியின் நுழைவு வாயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பள்ளியில் உள்ள சில அறைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு அவை மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அருள்செல்வி, உடனடியாக தலைமை ஆசிரியர் செல்விக்கு தகவல் அளித்தார். தலைமை ஆசிரியை செல்வி பள்ளியில் பூட்டுகள் உடைக்கப்பட்டது குறித்து குமாரபாளையம் போலீஸ் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் விசாரணை செய்த பொழுது, பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பீரோக்களில் இருந்து இரண்டு லேப்டாப் திருட்டுப் போனது தெரிய வந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார், அரசு பள்ளியில் பூட்டை உடைத்து லேப்டாப் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.