குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியின் புதிய முதல்வராக, ரேணுகா பொறுப்பேற்றுக்கொண்டார்.

Update: 2021-11-23 13:45 GMT

ரேணுகா

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கண்ணன் என்பவர் முதல்வராக பணியாற்றி வந்தார். இவர் கிருஷ்ணகிரி மகளிர் கலை கல்லூரிக்கு பணியிட மாறுதலில் சென்றார். இவர் சென்ற பின்,  15 மாத காலமாக வணிகவியல் பேராசிரியர் ரகுபதி, பொறுப்பு முதல்வராக பணியாற்றி வந்தார்.

தாலுக்கா அந்தஸ்து பெற்ற குமாரபாளையம் கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வர் பணியிடம் நிரப்ப வேண்டும் என,  பல அமைப்பினர் சார்பில் நீண்ட மாதங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனடிப்படையில், ரேணுகா என்பவர் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவயல் கல்லூரியில் முதல்வராக நியமிக்கப்பட்டதுடன், கல்லூரி முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், சேலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராகவும், துறை தலைவராகவும் இருந்தவர். பதவி உயர்வு பெற்று குமாரபாளையம் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வரலாறு பாடத்தில் எம்.ஏ பட்டமும், எம்.பில் பட்டமும், பி.எச்.டி.யும் பயின்றுள்ளார். இது தவிர எம்.ஏ. பொது நிர்வாகம், டூரிசம் மற்றும் போக்குவரத்து நிர்வாகத்தில் டிப்ளோமா படிப்பும் பயின்றுள்ளார். இவருக்கு அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News