அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர ஆக. 16 ல் விண்ணப்பம் பெற அழைப்பு
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர ஆக. 16 முதல் விண்ணப்பம் பெறலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர ஆக. 16ல் விண்ணப்பம் பெறலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.
குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா வெளியிட்ட தகவல்: குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு காலியாக உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதள வழியாக விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் ஆக. 16 முதல் கல்லூரியில் நேரடியாக வழங்கப்படவுள்ளது. இணையதள வழியாக விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
--