அரசு கலைக்கல்லூரியில் புதிய 10 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் புதிய 10 வகுப்பறைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.;

Update: 2025-05-20 12:56 GMT

அரசு கலைக்கல்லூரியில் புதிய 10 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் புதிய 10 வகுப்பறைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்படவுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள், இரண்டு கழிவறைகளுக்கு 4.25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேற்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் கல்லூரி முதல்வர் சரவணாதேவி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. வசந்தி பங்கேற்று, வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

படவிளக்கம் : 

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதியதாக கட்டப்படவுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள், இரண்டு கழிவறைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. வசந்தி, கல்லூரி முதல்வர் சரவணாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News