கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவராக கோவிந்தராஜ் நியமனம்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவராக கோவிந்தராஜ் நியமனம் செய்யப்பட்டார்.;
குமாரபாளையம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் குழு தலைவர் குமாரசாமி தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
மாநில பொது செயலர் ஜானகிராமன், மாநில அமைப்பு செயலர் பாரதி உள்ளிட்டோர் கோவிந்தராஜ் என்பவரை மாநில தலைவராக தேர்வு செய்தனர்.
மேலும் 5 பேர் கொண்ட ஆலோசனைக் குழு, 12 பேர் கொண்ட செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை மூத்த நிர்வாகிகள் பாராட்டினார்கள்.