குமாரபாளையத்தில் மத்திய அரசு ஆணையருக்கு அரசு அதிகாரிகள் வரவேற்பு

குமாரபாளையத்தில் மத்திய அரசு ஆணையருக்கு ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி., தாசில்தார், நகராட்சி கமிஷனர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.;

Update: 2021-12-26 12:30 GMT

மத்திய அரசின் சமூக நீதி அமைச்சக அதிகார மையம், மற்றும் தூய்மை பணியாளர்கள் நல்வாழ்வு தேசிய குழு தலைவருமான வெங்கடேசனுக்கு . திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

மத்திய அரசு ஆணையருக்கு ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி. தாசில்தார், நகராட்சி கமிஷனர் மலர்கொத்து வழங்கி வரவேற்பு வழங்கினார்கள்.

மத்திய அரசின் சமூக நீதி அமைச்சக அதிகார மையம் மற்றும் தூய்மை பணியாளர்கள் நல்வாழ்வு தேசிய குழு தலைவருமான வெங்கடேசன், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தூய்மை பணியாளர்கள் நலன் குறித்த ஆய்வு கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.

இதற்காக டெல்லியிலிருந்து கோவை வந்து, கோவையில் இருந்து கார் மூலம் நாமக்கல் வந்தார். வழியில் நாமக்கல் மாவட்ட எல்லையான குமாரபாளையம் பகுதியில் இவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கபட்டது.

அவருக்கு திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி, குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி, திருச்செங்கோடு டி.எஸ்.பி.(பொ) பழனிசாமி, குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலா, குமாரபாளையம் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ரவி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட பலர் மலர்கொத்து வழங்கியும் சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

Tags:    

Similar News