அரசு மருத்துவமனையில் அலட்சியம் காட்டும் டாக்டரால் பொதுமக்கள் அவதி

குமாரபாளையம் ஜி.ஹெச் .ல் அலட்சியம் காட்டும் டாக்டரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

Update: 2022-01-11 11:00 GMT

அரசு மருத்துவமனை,குமாரபாளையம். (மாதிரி படம்)

குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் சவுந்தர், 22. இவர் தனக்கு சளி, இருமல் இருந்ததால் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு சென்றுள்ளார். இதற்கு முன்பாக நீர் கட்டு பாதிப்பு ஏற்பட்டதால் கால் மற்றும் கையில் கட்டு கட்டி இருந்துள்ளார். டாக்டரிடம் சென்று சளி, இருமலுக்கு சிகிச்சை செய்ய கேட்க, இந்த கட்டு கட்டின இடத்திற்கே போக வேண்டியதுதானே ? இங்கு எதுக்கு வந்தீங்க? என்று ஏளனமாக கேட்டதுடன், அருகில் இருந்த நபரிடம் கிண்டலாக இது பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சவுந்தர் வெளியில் வந்து விட்டார். இது குறித்து சமூக வலை தளங்களில் தான் பேசிய ஆடியோவை பரப்ப செய்துள்ளார். இந்த ஆடியோ குறித்து ஜி.ஹெச். தலைமை டாக்டர் பாரதியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

இது பற்றி சம்பந்தப்பட்ட டாக்டரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி நகர அமைப்பாளர்கள் சித்ரா, உஷா கூறியதாவது:

இது போன்ற டாக்டர்களால், பல செவிலியர்களால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை அதிகரித்து வருகிறது. ஏழை மக்கள் வைத்தியம் செய்ய ஜி.ஹெச்.ஐ. நம்பித்தான் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு இது போல் உதாசீனப்படுத்தினால் எங்கு போவார்கள்? மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் ஜி.ஹெச். முன்பு மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினர்.

Tags:    

Similar News