பல்லாங்குழியாக காட்சி தரும் அரசு கல்லூரி சாலை

குமாரபாளையம் அருகே அரசு கல்லூரி சாலை மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது.;

Update: 2024-05-23 12:45 GMT

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, அரசு கல்லூரி சாலை பல்லாங்குழியாக காட்சி தருகிறது.

குமாரபாளையம் அருகே அரசு கல்லூரி சாலை பல்லாங்குழியாக காட்சி தருகிறது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஓலப்பாளையம் செல்லும் வழியில் அரசு கல்வியியல் கல்லூரி, அரசு கலை, அறிவியல் கல்லூரி, அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. இவைகளில் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இது தவிர பெரியார் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள், கத்தேரி ஊராட்சியை சேர்ந்த சடையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். பல்லாயிரக்கணக்கான நபர்கள் அன்றாடம் சென்று வரும் இந்த சாலை, குண்டும் குழியுமாக பல்லாங்குழியாக காட்சி தருகிறது.

இந்த பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிக வாகன போக்குவரத்து நடைபெறும் இந்த சாலை, குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். ஆம்புலன்ஸ் கூட விரைவில் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை புதிய தார் சாலையாக மாற்ற பல கோரிக்கை விடுத்தும் இதுவரை பலனில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அனைவரின் நலனை கருத்தில் கொண்டு இந்த சாலையை புதிய தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News