குமாரபாளையத்தில் அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு
குமாரபாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு நாளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் சடையம்பாளையத்தில் துவங்கி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். 7 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் கிராமத்தை தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடுதல், இல்லம் தோறும் கல்வி திட்டம் ஆகியன நடைபெற்றது.
நேற்று சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் , பல் பாதுகாப்பு குறித்த முகாம், தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், நூலகத்தை பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு ஆகியன நடைபெற்றன. முகாம் நிறைவையொட்டி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த முகாமில் 50 மாணாக்கர்கள் பங்கேற்றனர். கல்லூரி வணிகவியல் துறை தலைவர் ரகுபதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஞானதீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.