குமாரபாளையம் புறவழிச்சாலையில் பயணிகளை அலறவிட்ட அரசு பஸ்கள்
சேலத்தில் இருந்து வந்த இரு அரசு பேருந்துகள் குமாரபாளையம் புறவழிச்சாலையில் வேகமாக ஒன்றோடு ஒன்று முந்திச்சென்று பயணிகளை அலறவிட்டனர்.
சேலத்தில் இருந்து குமாரபாளையம் புறவழிச்சாலையில் வந்த இரு அரசு பஸ்கள் வேகமாக வந்து பயணிகளை அலறவிட்டனர்.
நேற்று சேலம் - கோவை புறவழிச்சாலையில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் இருந்து திருப்பூர் மற்றும் கோவை செல்லும் இரு அரசு பஸ்கள் நேற்று காலை 10:00 மணியளவில் புறப்பட்டன. இவைகள் புறப்பட்ட இடத்தில் இருந்தே வேகமாக சென்று ஒருவரை ஒருவர் முந்தி சென்று கொண்டிருந்தனர்.
குமாரபாளையம் அருகே வரும்போது சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு இரு பஸ்களும் ஒன்றோடு ஒன்று உரசுவது போல் வந்தனர். இதனால் பயணிகள் இரு பஸ்களிலும் அலறினர். வழக்கமாக தனியார் பஸ்கள்தான் இது போன்ற ஆபத்தான செயலில் ஈடுபடுவார்.
ஆனால் அரசு பஸ்களே இப்படி செய்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இதுபோன்று பயணிகளின் உயிரோடு விளையாடும் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.