அரசு பி.எட்., கல்லூரியில் இறகு பந்து விளையாட்டுப் போட்டிகள்
குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் இறகு பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.;
குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கல்லூரி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் ஏப். 19 வரை நடைபெறவுள்ளன. இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான சதுரங்கம், இரட்டையர் கேரம், சதுரங்கம் போன்ற உள்ளரங்க போட்டிகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வளைப்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, கபாடி, உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டிகளை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் ரவி போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துகிறார். கல்லூரி பேராசிரியர்கள் ஒவ்வொரு போட்டிக்கும், ஒருவர் வீதம் பொறுப்பேற்றுள்ளனர்.