குமாரபாளையத்தில் நல்லாட்சி வாரம் கடைபிடிப்பு: புகார் மனு வழங்கிய பொதுமக்கள்
குமாரபாளையத்தில் நல்லாட்சி வாரம் கடைபிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை புகார் மனுக்களாக வழங்கினர்.;
இந்திய திருநாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி மத்திய அரசின் அமுத பெருவிழா திட்டத்தின் கீழ் டிச. 20 முதல் டிச 25 வரை நடைபெறவுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பொறுப்பு ஒ.ஏ.பி. தாசில்தார் சிவகுமாரிடமும், நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் சசிகலவிடமும் பொதுமக்கள் மனுக்கள் வழங்கினார்கள்.
தாலுக்கா அலுவலகத்தில் 8 மனுக்களும், நகராட்சி அலுவலகத்தில் 2 மனுக்களும் பெறப்பட்டன. இவைகள் பரிசீலனை செய்யப்பட்டு குறைகள் போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
இதே போல் பள்ளிபாளையம் நகராட்சியிலும் மனுக்கள் பெறப்பட்டன.