குமாரபாளையத்தில் உலக ஓசோன் தினம் விழா
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.;
உலக ஓசோன் தினம்
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் உலக ஓசோன் தினம் விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது. புத்தர் வீதியில் இல்லம் தேடி கல்வி மாணவ மாணவிகள், புவியை தூய்மையாக வைத்திருப்போம், அசுத்தம் செய்ய மாட்டோம், என்பது உள்ளிட்ட உலக ஓசோன் தின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மேலும் ஓவிய போட்டி மற்றும் பேச்சு போட்டி வைக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசாக புத்தகங்களை வழங்கிய விடியல் அமைப்பாளர் பிரகாஷ், உலக ஓசோன் தினத்தை பற்றியும், சுற்றுச்சூழல் எவ்வாறு காப்பாற்றப்பட வேண்டும் எனவும் மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ராணி, சித்ரா, ஜமுனா, மற்றும் சமூக ஆர்வலர்கள் சித்ரா, தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.