குமாரபாளையம் அருகே லாரிகள் மோதிய விபத்தில் சாலையில் சிதறிய கண்ணாடி பாட்டில்கள்

குமாரபாளையம் அருகே லாரியின் பின்புறம் மற்றொரு லாரி மோதிய விபத்தில் கண்ணாடி பாட்டில்கள் சாலையில் சிதறின.

Update: 2022-01-19 13:15 GMT

குமாரபாளையம் அருகே லாரியின் பின்புறம் மற்றொரு லாரி மோதிய விபத்தில் கண்ணாடி பாட்டில்கள் சாலையில் சிதறின.

ஆந்திரா, சித்தூரில் இருந்து கோவையில் செயல்பட்டு வரும் மதுபான ஆலைக்கு காலி பாட்டில்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குமாரபாளையம் அருகே சேலம்- கோவை புறவழிச்சாலையில், எதிர்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன், 62, என்பவர் ஓட்டி வந்தார். அப்போது இதன் பின்னால் சென்னையில் இருந்து ஈரோடு அருகே உள்ள பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கிற்கு அடுப்புக்கரி பாரம் ஏற்றியவாறு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த இளங்கோவன் ஓட்டி வந்தார்.

முன்னால் போன கண்ணாடி பாட்டில்கள் லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதால் கண்ணாடி பாட்டில்கள் சாலையில் சிதறின. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லாரியின் ஓட்டுநர்களும், போலீசாரும் உடைந்த கண்ணாடி பாட்டில்களை அப்புறப்படுத்தினர். இது குறித்து தேவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News