தங்கை மகள் மாயம்: போலீசில் புகார்

குமாரபாளையத்தில் தங்கை மகள் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.;

Update: 2022-06-02 15:15 GMT

பைல் படம்.

குமாரபாளையம் ராஜா தெருவை சேர்ந்தவர் தேவி, 32. இவர் விஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிஷா, 14, என்ற மகள் உள்ளார். தேவி, விஜய் என்பவரை விட்டுவிட்டு வேறொரு நபருடன் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். நிஷாவை அதே பகுதியில் வசிக்கும் இவரது பெரியம்மா வடிவு, 34, என்பவர் வளர்த்து வந்தார். இந்நிலையில் மே 30 ம் தேதி  நகராட்சி அலுவலகம் சென்று விட்டு மதியம் 02:30 மணிக்கு வந்த போது, வீட்டில் நிஷாவை காணவில்லை. இது குறித்து நிஷாவை கண்டுபிடித்து தருமாறு குமாரபாளையம் போலீசில் வடிவு புகார் செய்துள்ளார். புகாரின் படி நிஷாவை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News