குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுங்க: நகராட்சி கமிஷனர்

குப்பைகளைதூய்மை ணியாளர்களிடம் ஒப்படையுங்கள் என நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-07 13:30 GMT

நகராட்சி கமிஷனர் விஜயகுமார்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் விஜயகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குமாரபாளையம் நகராட்சியில் 100 சதவீதம் குப்பைகள் இல்லாத நகராட்சியாக மாற்ற அதிகாலை 05:00 மணி முதல் நகரின் அனைத்து பகுதியிலும் தூய்மை பணி தீவிரமாக தினமும் நடைபெற்று வருகிறது. நகரில் உள்ள பொதுமக்கள், வியாபார நிறுவனத்தார், தொழிற்கூடங்கள் வைத்திருப்போர் உள்ளிட்ட அனைவரும் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து கொடுத்து, நகரின் தூய்மைக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நகராட்சி கமிஷனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News