கும்பாபிஷேக விழாவில் நகை திருடும் கும்பல்: போலீசார் எச்சரிக்கையால் பெண்கள் உஷார்

குமாரபாளையத்தில் நகை திருடும் 2 பெண்களை கூட்டத்தை விட்டு வெளியேற்றியதாக போலீசார் கூறியதால் பெண்கள் எச்சரிக்கையாக இருந்தனர்.

Update: 2022-09-08 10:45 GMT

கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட கூட்டம்.

குமாரபாளையத்தில் நகை திருடும் 2 பெண்களை கூட்டத்தை விட்டு வெளியேற்றியதாக போலீசார் கூறியதால் பெண்கள் எச்சரிக்கையாக இருந்தனர்.

குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை 09:00 மானியளவில் நடந்தது. பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவ்வப்போது மைக்கில் நகை திருடர்கள் ஜாக்கிரதை என சொல்லிக்கொண்டே இருந்தனர். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் முன்பாக, நகை திருடும் பெண்கள் இருவரை போலீசார் பிடித்து கூட்டத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். இன்னும் சில நகை திருடர்கள் கூட்டத்தில் உள்ளனர். பெண்கள் தங்கள் நகைகளை பத்திரமாக பின் போட்டு பாதுகாத்து கொள்ள வேண்டும் என சாதுர்யமாக ஒரு தகவலை மைக்கில் கூறினார்கள்.

அதன் பின் பெண்கள் உஷாராகி, தங்கள் நகைகளுக்கு பின் போட்டுக் கொண்டனர். போலீசாரின் இந்த அறிவிப்பால் நகையை பெண்கள் பத்திரமாக பாதுகாக்க உதவியாக இருந்தது.

Tags:    

Similar News