பள்ளிபாளையத்தில் தடையை மீறி விநாயகர் சிலை: போலீசார் தடுத்து நிறுத்தம்

பள்ளிபாளையத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை வைக்க முயற்சித்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.;

Update: 2021-09-10 16:30 GMT
பள்ளிபாளையத்தில் தடையை மீறி விநாயகர் சிலை: போலீசார் தடுத்து நிறுத்தம்

பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை.

  • whatsapp icon

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனைக் கண்டிக்கும் வகையில் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிலை வைத்து வழிபட முயற்சி செய்தனர். அப்போது வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அரசு உத்திரவை எடுத்து கூறினர்.

ஆனாலும் இந்து மதம் சார்ந்த திருவிழாக்கள் கொண்டாட தமிழக அரசு தடை விதித்து வருகிறது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை முடிவில் அந்த அமைப்பினர் சிலைகளை எடுத்துச் சென்றனர். முன்னதாக அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News