காவிரியில் விஜர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்

குமாரபாளையத்தில் கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டன.;

Update: 2024-09-08 15:15 GMT

குமாரபாளையம் அரசமரத்து விநாயகர் மகளிர் பக்தர்கள் சார்பில் விநாயகர் சிலை கொலு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. 

காவிரியில் விஜர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்

குமாரபாளையத்தில் கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி நாளையொட்டி குமாரபாளையம் பகுதியில் 31 விநாயகர் சிலைகள் போலீசார் அனுமதியின் பேரில் கொலு வைக்கப்பட்டன. குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே காவிரி ஆற்றில் பெரும்பாலான விநாயகர் சிலைகள் நேற்று காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் மற்றும் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு படையினர் காவிரி கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை முதல் இரவு வரையிலும் குமாரபாளையம் மட்டுமின்றி பல்வேறு ஊர்களிலிருந்து விநாயகர் சிலைகள் வந்தவண்ணம் இருந்தது. சிலைகளுடன் அந்தந்த பகுதி பொதுமக்களும் ஊர்வலமாக வந்தனர். இதனால் சேலம் சாலையில் போக்குவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ராஜா வீதியில் அரசமரத்து மகளிர் பக்தர்கள் சார்பில் விநாயகர் சிலை கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.


                          குமாரபாளையத்தில் கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டன.

Similar News